தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் நினைவுப் பகிர்வுகள்
1988 ஆம் ஆண்டு தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் முன்றலில் சாகும்வரையிலான உண்ணாவிரத அகிம்சைப் போராட்டத்தை மேற்கொண்டு தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தாயகத்துத் தாயவள் தியாகச்சுடர் அன்னை பூபதி அம்மாவின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை இன்று இலண்டன் மாநகரில் கரோ எனும் பிரதேசத்தில் மாலை 5:00 மணியளவில் தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு சதா அவர்களின் ஒருங்கிணைப்பில், தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு.த.நிருபன் அவர்களின் தலைமையில் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது.
தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை
தமிழீழ அரசியல்துறையின் துணை ஊடகப் பொறுப்பாளர் திரு ம.கண்ணா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து..
திருமதி மதுரா
திருமதி கல்யாணி
திருமதி லதா
திருமதி நவமணி
திருமதி ஜீவா
திருமதி ஈசன்
மற்றும் தமிழீழ மாணவரமைப்புச் செயற்பாட்டாளர் திரு மாறன் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அடுத்த நிகழ்வாக தமிழீழத் தேசியக் கொடியேற்றம் இடம்பெற்றது.
தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் பொறுப்பாளர் திரு ச.அறிவாளன் அவர்கள், தமிழீழத் தேசிய கீதம் ஒலிக்கும் தருணத்தில் தமிழீழத் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வாக பொது மாவீரர் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை தமிழீழ அரசியல்துறையின் மேலவை உறுப்பினர் திரு சுபன் அவர்கள் ஏற்றிவைக்க, மலர் மாலையினை தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் நிதிப் பொறுப்பாளர் திரு ஆதவன் அவர்கள் அணிவித்தார்.