செய்திகள்

14ஆம் ஆண்டு தமிழர் இனவழிப்பு நாள் நினைவேந்தல் - 2023

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2023

2009 மே மாதம் என்பது தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத இருள்படிந்த நாள், இந்த மாதத்தில்தான் எமது இனம், சிங்களப் பேரினவாத அரசாலும், சர்வதேச மேலாதிக்க வல்லரசுகளின் நயவஞ்சகச் சூட்சியாலும், சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கங்களைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் அரணாக இருந்த தமிழீழ இராணுவமாகிய எமது தமிழீழ விடுதலைப் புலிகள் பலரையும், பல்லாயிரக்கணக்கான எமது தமிழீழ மக்களையும் ஈன இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட கொடிய மாதமே இந்த மே மாதம் ஆகும்.

தமிழின வரலாற்றில் இவ் வலிசுமந்த மாதத்தை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். எந்த இடத்தில் நாம் வீழ்த்தப்பட்டோமோ அதே இடத்தில் எமது தமிழினம் வீறுகொண்டு மீண்டெழும் என்பது உறுதி!

"முள்ளிவாய்க்கால் கஞ்சி"

தாயக அரசியல்துறையின் ஒருங்கிணைப்பில் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக  யாழ்/தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயமுன்றல்,
யாழ்/புத்தூர் வளர்மகள் பாலர் பாடசாலை,
யாழ்/மருதனாமடம் பொதுச்சந்தை,
யாழ்/நெலியடி பேருந்து நிலையம்,
யாழ்/புத்தார் சோமஷ் கந்தா கல்லூரி,
யாழ்/பருத்தித்துறை நகர்ப் பகுதி,
யாழ்/கல்வியங்காடு பொதுச்சந்தை,
யாழ்/உரும்பிராய் சிவகுமார் சிலையடி,
கிளி/புன்னை நீராவிப் பாடசாலை,
முல்லை/விசுவமடு ரெட்பானா புனித இராயப்பர் தேவாலயம்,
முல்லை/முள்ளிவாய்க்கால்  பொதுச்சந்தை,
முல்லை/முள்ளிவாய்க்கால் கடற்கரை,
முல்லை/புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை,
முல்லை/ புதுக்/வேணாவில் முருகானந்தா வித்தியாலயம்,
முல்லை/வேணாவில் கணேசா வித்தியாலயம்,
முல்லை/வற்றாப்பளைச் சந்தி
ஆகிய இடங்களில் மே 12,13,14,15,16,17,18 ம் தேதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன், இதில் மதகுருமார், அரச உத்தியோகத்தர்கள்,பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர்கள், முதியோர்கள் என அனைவரும்  முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு வாரத்தை மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.
மேலும் தாயக அரசியல்துறையினரால் மே18 தமிழர் இனவழிப்பு வலிசுமந்த நாட்கள் பற்றி  தாயகம் முழுமைக்கும் பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள், சுவொட்டிகள் மற்றும் ஒலிபொருக்கி வாயிலான பரப்புரைகளைச் செய்தனர். அத்தோடு அம்பாறையில் தாயக அரசியல்துறையினரின் ஊடகவியளாளர் சந்திப்பும் இடம்பெற்றது.